இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நடைபெற்றது;
கல்லக்குடி,ஆக.3-
புள்ளம்பாடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய அளவிலான மாநாடு அதன் தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஜார்ஜ், பொருளாளர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாநாட்டில் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் குடிநீர், கழிவறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய விபத்து சிகிச்சை பிரிவு அமைத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.