ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்;

Update:2022-07-19 22:04 IST

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். இதன்படி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு 61 விவசாயிகள் 277 மூட்டைகள் கொப்பரையை கொண்டு வந்தனர். இதில் முதல் ரகமாக 146 மூட்டைகளும், 2-வது ரகமாக 131 மூட்டைகளும் பிரிக்கப்பட்டது.

இதையடுத்து நடந்த பொது ஏலத்தில் தாராபுரம், காங்கேயம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். ஏலத்தில் முதல் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.73 முதல் ரூ.81.25-க்கும், 2-வது ரகம் ரூ.62 முதல் ரூ.70.10 வரைக்கும் ஏலம் போனது. தொடர் மழையின் காரணமாக கடந்த வாரத்தை விட விலை குறைந்தது. கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது.விலையும் குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்