மது விற்றவர் கைது

நெகமம் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-12 20:30 GMT


நெகமம்


நெகமத்தை அடுத்த வடசித்தூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள முட்புதரில் மறைத்து வைத்து அதிகவிலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது மதுவிற்ற அதே ஊரை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்