தோட்டத்தில் புகுந்து வெங்காயத்தை நாசம் செய்த மர்ம நபர்கள்

தோட்டத்தில் புகுந்து வெங்காயத்தை மர்மநபர்கள் நாசம் செய்தனர்.;

Update:2023-08-04 00:30 IST

ஆலங்குளம்:

வீரகேரளம்புதூர் அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி செல்லையா (வயது 73). ஆலங்குளம் கீழவீராணம் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளார். இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை தனது வயலுக்கு வந்த முத்துசாமி செல்லையா, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காய பயிர்கள் கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அருகில் சென்று பார்த்த போது, செடிகளுக்கு மர்ம நபர்கள் இரவு நேரத்தில் புகுந்து களைக்கொல்லி மருந்தை அடித்தது தெரிய வந்தது. கருகி போன பயிரின் மதிப்பு தற்போதைய விலை நிலவரப்படி ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்