கச்சிராயப்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவருக்கு வலைவீச்சு
கச்சிராயப்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தனி பிரிவு போலீஸ் விஜய் மற்றும் போலீசார் கச்சிராயப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பால்ராம்பட்டு வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கண்ணுசாமி என்பவர் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த கண்ணுசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய கண்ணுசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.