ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை செஞ்சியில் பரபரப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து செஞ்சி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-08-10 22:50 IST

செஞ்சி, 

செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சிக்குட்பட்ட ராதாபுரம் கிராம ஏரிக்கரையோரம் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 5 தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் ஏரியை ஆக்கிரமித்து வசித்து வருவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீசு கொடுத்ததோடு, ஆக்கிரமிப்பை தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்டு 11-ந்தேதி  ராதாபுரம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அப்பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சகாதேவன், புரட்சிகர வாலிபர் சங்கம் நாகராஜ், விவசாய சங்க வட்ட தலைவர் மாதவன், பழங்குடியினர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி உள்ளிட்டோர் நேற்று மாலை செஞ்சி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஏரிக்கரையோரம் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பியபடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த தாசில்தார் நெகருன்னிசா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, கலைந்து போக செய்தார். இ்ந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்