43 போலீசாருக்கு பதவி உயர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் 43 போலீசாருக்கு பதவி உயர்வு;
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வருபவர்களில் 43 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் ஏட்டுகள் மாணிக்கவாசகம், ராஜா, இளவரசன், சிவக்குமார், சித்ரா உள்பட 43 பேர் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் அவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.