நீர்மேலாண்மை குறித்த கருத்தரங்கம்

ஆண்டிப்பட்டி அருகே நீர்மேலாண்மை குறித்து கருத்தரங்கம் நடந்தது.;

Update:2023-03-10 00:15 IST

ஆண்டிப்பட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியில் மத்திய நிர்வாக அமைச்சகம், மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம் மற்றும் சென்னை, தென்கிழக்கு கடலோர மண்டலம் சார்பில் நிலத்தடி நீர்மேலாண்மை குறித்து கருத்தரங்கம் நடந்தது. இதற்கு நிலத்தடி நீர் வாரிய மண்டல இயக்குனர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மேலாண்மை துறை இணை இயக்குனர் செந்தில்குமார், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அண்ணாதுரை, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கருத்தரங்கில் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தின் புவியியல் அமைப்பு மற்றும் நிலத்தடி நீர்வள ஆதாரங்கள் பற்றியும், அதனை பாதுகாப்பது தொடர்பான மக்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கி கூறினர். மேலும் விஞ்ஞானிகள் ராஜ்குமார், ரவிச்சந்திரன், பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினர். கருத்தரங்கில் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்