தந்தை-சித்தியை வெட்டிய மகன்கள் கைது

2-வது திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்து, தந்தை-சித்தியை வெட்டிய மகன்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-10-29 21:24 IST

வத்தலக்குண்டு அருகே உள்ள ஊத்தாங்கல் புதுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 49). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. அவருடைய மனைவி ஜெயா. இந்த தம்பதிக்கு சற்குண பாண்டி (23), புவனேஷ் குமார் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டியில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா இறந்து விட்டார்.

ஜெயாவின் தங்கை பாண்டியம்மாள் (39). அவருடைய கணவர் முத்தையா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தையா இறந்து விட்டார்.

இந்தநிலையில் பாண்டி, தனது கொழுந்தியாள் பாண்டியம்மாளை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இது, சற்குண பாண்டிக்கும், புவனேஷ் குமாருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஊத்தாங்கல் புதுப்பட்டியில் வசித்த பாண்டி, பாண்டியம்மாள் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சற்குணபாண்டி, புவனேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்