மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

ஆலடிக்குமுளை ஊராட்சியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-05-01 20:00 GMT

கரம்பயம்:

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வலியுறுத்தி ஆலடிக்குமுளை அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களும் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர். ஊா்வலத்தை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிவேல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சூர்யா புகழேந்தி, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சத்தியமூர்த்தி, புகழேந்தி மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்