தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலி

குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலியானார்.;

Update:2022-05-27 15:47 IST

ஜோலார்பேட்டை


குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூர்- வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்