திருக்குறுங்குடி அருகே அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன

திருக்குறுங்குடி அருகே, மலையடிபுதூரில் அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்;

Update:2022-05-21 03:45 IST

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே, மலையடிபுதூரில் அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.

குரங்குகள் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூரில் குரங்குகள் அட்டகாசம் செய்தன. வீடுகளில் புகுந்து பொருட்கள் நாசம் செய்தன. சிறுவர், சிறுமிகளையும் அச்சுறுத்தி வந்தன.

எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பிடிபட்டன

இதையடுத்து திருக்குறுங்குடி வனத்துறையினர் மலையடிபுதூரில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கூண்டுக்குள் பழம் மற்றும் உணவு பொருட்களை வைத்து கண்காணித்தனர். இதில் 2 குட்டிகள் உள்பட 5 குரங்குகள் பிடிபட்டன.

பின்னர் அந்த குரங்குகளை மணிமுத்தாறு மலையில் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்