அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும் ;விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.;

Update:2022-07-14 03:09 IST

நாகர்கோவில், 

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.

மனு

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ரெயில்வேதுறை செயல்பாட்டு மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரெயில் முக்கிய ரெயிலாக இருந்து வருகிறது. ஆனால் சரியான திட்டமிடுதல் இன்றி இந்த ரெயில் இயக்கப்படுவதால் இதன் பயண நேரம் மிக அதிகமாக உள்ளது. நாகர்கோவில்- சென்னை இடையே உள்ள வழித்தடத்தில் பல இடங்களில் ரெயில் நீண்ட நேரம் நிற்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, சரியாக திட்டமிட்டு இந்த ரெயிலின் பயண நேரத்தை குறைத்து மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்