பெண்ணை தாக்கியவர் கைது
மானூர் அருகே பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
மானூர்:
மானூர் அருகே உள்ள ராமையன்பட்டி புதுக்காலனியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மனைவி காந்தி (வயது 50). கட்டிட தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் முருகன் என்பவரிடம் சம்பள பணத்தை கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுவந்தார்.
இதை தவறாக நினைத்த முருகனின் மகன் மணிகண்டன் (26), காந்தியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி கம்பால் தாக்கினார்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காந்தி மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.