கடனை திருப்பிக் கேட்ட நண்பருக்கு கொலை மிரட்டல்

தேனி அருகே கடனை திருப்பி கேட்ட நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update:2023-03-09 00:30 IST

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). இவரும், ஆண்டிப்பட்டியை சேர்ந்த கதிரேசன் (35) என்பவரும் நண்பர்கள். கதிரேசன் தனியார் பார் நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ரஞ்சித்குமாரிடம், கதிரேசன் ரூ.7 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தை திருப்பிக் கேட்டபோது கொடுக்க மறுத்து கதிரேசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரஞ்சித்குமார் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கதிரேசன் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்