ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆரணியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அதனை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-10-05 22:43 IST

ஆரணி

ஆரணி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், மகேந்திரன் மற்றும் போலீசார் அருணகிரி சத்திரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகம்படும்படி ஒரு நபர் கைப்பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் எஸ்.வி. நகரம் ஊராட்சி புது தெருவை சேர்ந்த பலராமன் என்பவர் மகன் பிரகாஷ் (வயது 38) என்பதும், பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 68 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பிரகாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்