தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;

Update:2022-10-08 00:15 IST

கட்டிகானப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கலந்து கொண்டார். ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட 100 பேருக்கு வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஊராட்சி தலைவர் காயத்திரி கோவிந்தராஜ் வழங்கினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத், ஊராட்சி துணைத்தலைவர் செல்வி பாஸ்கர், செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்