கடமலைக்குண்டு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கடமலைக்குண்டு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.;

Update:2022-08-01 22:49 IST

கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 35). இவர் வீட்டில் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் சுதாகரன் இன்று குமணன்தொழு அருகே தனியார் தோட்டத்திற்கு சென்று தனது ஆடுகளுக்காக இலவமரத்தில் ஏறி இலைகளை பறித்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் நின்றிருந்த மரக்கிளை எதிர்பாராதவிதமாக அருகே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியில் உரசியது. அப்போது மரத்தின் கிளையில் மின்சாரம் தாக்கி, சுதாகரன் மீது பாய்ந்தது. இதில் மரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட சுதாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சுதாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்