பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.;

Update:2023-03-30 02:15 IST

பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 43). இவர் தேனியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் சார்பில் பெரியகுளம் அருகே முருகமலை புலி ஓடை பகுதியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு தடுப்பணை கட்டுமான அளவை அளப்பதற்காக பால்பாண்டி அலுமினிய அளவுக்கோலை எடுத்துச்சென்றார்.

அப்போது மேலே சென்ற மின்கம்பியில் அளவுக்கோல் பட்டது. இதில், பால்பாண்டி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்