பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-06-26 12:20 GMT

Image Courtesy: AFP

டெகுசிகல்பா:

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு ஹோண்டுராஸ். இந்நாட்டின் வடக்கு பகுதியில் சொழமா என்ற நகரம் உள்ளது.

இந்த நகரில் பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த விளையாட்டு அரங்கிற்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்கள் விளையாட்டு அரங்கில் இருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அதிபர் ஐரிஷ் ஜியோமாரா கெஸ்ட்ரோ செமியிண்டொ உத்தவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்