ரஷ்யாவை தொடர்ந்து பெரு நாட்டில் பிரபலம் அடையும் கன்னத்தில் பலமுடன் அறையும் போட்டி

பெரு நாட்டில் நடந்த கன்னத்தில் பலமுடன் அறையும் போட்டி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.;

Update:2019-12-09 20:49 IST
ரஷ்யாவை தொடர்ந்து பெரு நாட்டில் பிரபலம் அடையும் கன்னத்தில் பலமுடன் அறையும் போட்டி
லிமா,

பெரு நாட்டின் லிமா நகரில் ஒருவரது கன்னத்தில் மற்றொருவர் பலமுடன் அறையும் போட்டி நடந்தது.  இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  300 அமெரிக்க டாலர் பரிசு தொகை கொண்ட இந்த போட்டியை கண்ட ரசிகர்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கோஷமிட்டபடி இருந்தனர்.

போட்டி நடைமுறையின்படி, ஒருவர் கன்னத்தில் மற்றொருவர் பலமுடன் அறைவார்.  அந்த அறையை வாங்கி கொண்ட நபர், எதிராளியை பலமுடன் திருப்பி அறைவார்.  தொடர்ந்து ஒருவரை ஒருவர் அறைந்து கொள்வார்கள்.  இதில், எதிரில் இருப்பவர் போட்டியில் இருந்து விலகும் வகையில் யார் கன்னத்தில் பலமுடன் அறைகின்றாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.

வெற்றி பெற விரும்பும் போட்டியாளர், அறைவதற்கு முன்பே போட்டியில் இருந்து விலக கூடாது.  இதில் ஒரு நபர் கன்னத்தில் விழுந்த அறையை பொறுக்க முடியாமல் மேடையிலேயே விழுந்து விட்டார்.

இந்த போட்டியை நடத்திய ஏற்பாட்டாளர் கூறும்பொழுது, கன்னத்தில் பலமுடன் அறையும் போட்டி அமெரிக்காவில் தொடங்கியது.  பின் ரஷ்யாவில் பிரபலமடைந்து சமூக ஊடகம் வழியே உலகம் முழுவதும் பரவி விட்டது என கூறினார்.

மேலும் செய்திகள்