பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கீவ் நகரிலிருந்து இலவச ரெயில் சேவை - இந்திய தூதரகம்

உக்ரைனில் தாக்குதல் நடக்கும் இடத்திலிருந்து இந்தியர்கள் மேற்கு பகுதிகளுக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2022-02-27 11:14 GMT
கீவ்,

கடந்த பிப்ரவரி 24 -ஆம் தேதி ரஷிய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்தி உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் அங்கு தாக்குதல் நடந்து வருகிறது.

முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும்,  உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் இரு நாட்டு ராணுவமும் இடையே கடுமையாக மோதி வருகிறது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை, தாக்குதல் நடைபெறும் பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கீவ் நகரிலிருந்து இலவச ரெயில் சேவை இயக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்