வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்கள் : பல புதிய அறிவிப்புகள் வெளியீடு - பயனர்கள் மகிழ்ச்சி

இந்த அப்டேட்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம்.

Update: 2022-06-10 13:13 GMT

Image Courtesy : AFP 

வாஷிங்டன்,

வாட்ஸ் அப் குறித்த பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப்-பில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அப்டேட் அறிவிப்பில் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2ஜிபி வரையிலான போட்டோ, வீடியோ போன்றவற்றையும் பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ்-அப் வாய்ஸ் காலில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது இனி ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்