லாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 19 பேர் பலி

லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.;

Update:2023-05-26 23:22 IST

யவுங்டி,

மத்திய ஆப்பிரிக்க நாடு கேமரூன். இந்நாட்டின் இசிகா நகரில் இருந்து பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. டவ்லா - இடா சாலையில் சென்றபோது சாலையின் எதிரே வந்த லாரி மீது மோதிய பஸ் கோர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்