கிரீஸ் நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் உள்ள 300 எம்.பி.க்களில் 176 பேர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Update: 2024-02-16 14:33 GMT

ஏதென்ஸ்,

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதாவிற்கு கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள 300 எம்.பி.க்களில் 176 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் கிரீஸ் பிரதமரின் வலதுசாரி ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இந்த மசோதா அரசிதழில் வெளியான பின்னர் சட்டமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், இதன் மூலம் எல்.ஜி.பி.டி.(LGBT) உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் கிரிஸ் நாட்டின் பாரம்பரிய தேவாலய திருச்சபையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்