பாகிஸ்தான்: பலுசிஸ்தான் மாகாணத்தில் கையெறி குண்டு வீசி தாக்குதல் - ஒருவர் பலி -14 பேர் காயம்

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-08-06 06:10 GMT

Image Courtesy: ANI

லாகூர்,

பலுசிஸ்தானின் குவெட்டா கூட்டுச்சாலை பகுதியில் நேற்று இரவு கையெறி குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஒட்டி தேசியகொடி மற்றும் அலங்காரப்பொருட்களை சாலையோர கடையில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர் கடை மீது கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 14 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்