உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இத்தாலி வலியுறுத்தல்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இத்தாலி நாட்டின் ராணுவ மந்திரி கைடோ குரோசெட்டோ ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியை வலியுறுத்தி உள்ளார்.
நேட்டோ கூட்டணியில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை செய்கின்றன. இதன்மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அதேசமயம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என இத்தாலி நாட்டின் ராணுவ மந்திரி கைடோ குரோசெட்டோ ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியை வலியுறுத்தி உள்ளார்.