ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றுக்காக புதிய தடுப்பூசி அறிமுகம்

கொரோனா வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது.

Update: 2022-08-09 02:55 GMT

டோக்கியோ,

உலகம் முழுவதும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. உலகின் பல நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்