'கமலா ஹாரிஸ் அமெரிக்க மக்களின் கனவுகளை நனவாக்குவார்' - பில் கிளிண்டன்

கமலா ஹாரிஸ் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.;

Update:2024-08-22 14:54 IST

Image Courtesy : AFP

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் துணை ஜனாபதிபதி வேட்பாளர் டிம் வால்ஸ் ஆகியோரை ஆதரித்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் பேசினார். அப்பொது அவர் கூறியதாவது;-

"எனக்கு 2 நாட்களுக்கு முன்பு 78 வயது ஆனது. நான் டிரம்பு குறித்து தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பும் ஒரே ஒரு கருத்து என்னவென்றால், அவரை விட நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் எப்போதும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.

கமலா ஹாரிஸ் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அவர் அமெரிக்க மக்களின் கனவுகளை நனவாக்குவார். மிகுந்த அனுபவமும், நம்பிக்கையும், உற்சாகமும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ், நமது நாட்டின் குரலாக இருப்பதற்கு அனைத்து தகுதிகளையும் உடையவர் ஆவார்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்