பிலிப்பைன்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி
பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.;
Image Courtesy: Reuters
மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றவர், பெர்டினான்ட் மார்கோஸ் (வயது 64). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அவரது ஊடக செயலாளர் ரோஸ் பீட்ரிக்ஸ் குரூஸ் ஏஞ்சல்ஸ் நேற்று மணிலாவில் நிருபர்களிடம் அறிவித்தார்.
அப்போது அவர், "அதிபர் பெர்டினான்ட் மார்கோசுக்கு லேசான காய்ச்சல் உள்ளது, மற்றபடி நலமாக உள்ளார்" என தெரிவித்தார். அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா கால நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ தொற்று இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.