குணமடைந்து வருகிறார் போப் ஆண்டவர் விரைவில் 'டிஸ்சார்ஜ்' - வாடிகன் தகவல்
போப் ஆண்டவர் குணமடைந்து வருகிறார் என்றும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
ரோம்,
போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும், அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என்றும் வாடிகன் அறிவித்தது.
போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புரூனி, போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.
சிக்கல்கள் எதுவுமின்றி போப் ஆண்டவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருவதாக கூறிய புரூனி, ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து வருகிற நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.