'அண்ணன் பிரபாகரன் உயிருடன் இல்லை'' - யுத்தத்தின் இறுதி நாள் வரை போராடிய வீரர் தகவல்

பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவத்துடனான இறுதி கட்ட யுத்தத்தில் சண்டையிட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் வீரர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-14 15:05 GMT

கொழும்பு,

2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழ இறுதி போரில் கடும் சண்டையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவர் இறந்து கிடப்பது போன்ற படமும் வெளியானது. இருப்பினும் பிரபாகரன் சாகவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்று தமிழ் தேசிய தலைவர்கள் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தனர். 14 ஆண்டுகளுக்கு பிறகுபிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று பரபரப்பான தகவலை தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்துக்கு இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதனிடையே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர், அவர் இறுதிப் போரில் ராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து குறித்து, முன்னாள் போராளியான வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தனிடம் பிபிசி செய்தி கேள்வி எழுப்பியது. அப்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2009ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வரை இறுதி யுத்தத்தில் தான் சண்டையிட்டதாக அவர் கூறுகின்றார்.

''13 வருடங்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம். இப்போது 14வது வருடத்திற்குள் வந்திருக்கின்றோம். அந்த வகையிலே எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பதுதான்.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளியான அரவிந்தன், 2009ம் ஆண்டு மே மாதம் நடுப் பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் நேரடியாகவே சண்டையிட்ட ஒருவராவார்.

பிரபாகரனின் தளபதிகளில் ஒருவரான ரத்னம் மாஸ்டருடன் இணைந்து கடமையாற்றிய போராளியாக இருந்தவர் அரவிந்தன். இலங்கையில் தொடர்ச்சியாக காணப்பட்ட இனப்பிரச்சினை காரணமாக, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்