மெகுல் சோக்சி வழக்கு ரத்து: டொமினிகா அரசு நடவடிக்கை
மெகுல் சோக்சி மீதான வழக்கினை டொமினிகா அரசு ரத்து செய்துள்ளது.;
Image Courtesy: PTI
புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சியும் ஆளாகி உள்ளனர்.
மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கரீப்பியன் தீவு நாடான ஆன்டிகுவா பார்புடாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டொமினிகா நாட்டினுள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் அந்த நாட்டின் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. தன்னை ஆன்டிகுவாவில் இருந்து சிலர் கடத்தி வந்து, டொமினிகாவில் அடைத்து வைத்திருந்ததாக மெகுல் சோக்சி கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வழக்கு நீடித்தது. இப்போது அந்த வழக்கை டொமினிகா அரசு ரத்து செய்துள்ளது. இந்த தகவலை சோக்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.