கிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 3 அகதிகள் சாவு

கிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 3 அகதிகள் உயிரிழந்தனர்.;

Update:2023-05-27 23:08 IST

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சினை மற்றும் உள்நாட்டு போரால் நிலவும் வறுமை ஆகிய காரணங்களால் ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் கடல் வழியாக சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதில் பல பயணங்கள் விபத்திலேயே முடிவடைகின்றன.

அந்தவகையில் கிரீஸ் நாட்டின் மைக்கோனோஸ் தீவு அருகே ஏஜியன் கடலில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்தது. இதனையடுத்து தகவல் அறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்