இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ய நேரில் சென்ற பிரதமர்

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ய பிரதமர் ரிஷி சுனக்கும் அரசுஅதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.;

Update:2023-06-17 22:46 IST

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சட்டவிரோத குடியேறியவர்கள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். பதவிக்கு வந்த நாள் முதல் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

இந்த நிலையில் முன்தினம் இங்கிலாந்து முழுவதும் சட்டவிரோத குடியேறியவர்களை தேடி கண்டு பிடித்து கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குடியேற்ற அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஓட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் வேலை பார்க்கும் சட்டவிரோத குடியேறியவர்களை கைது செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது பிரதமர் ரிஷி சுனக்கும் அரசுஅதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அவர் குண்டு துளைக்காத ஆடையை அணிந்து அதிகாரிகளுடன் சேர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த அதிரடி நடவடிக்கையின்போது 20 நாடுகளை சேர்ந்த 105 சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்