கால்பந்து
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மாஸ்கோ,

ரஷியாவில் வருகிற 14-ந் தேதி தொடங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடுவர்கள் தவறான முடிவுகள் அளித்து விடாமல் இருக்க வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு போட்டியின் போதும் எடுக்கப்படும் வீடியோ பதிவு காட்சிகளை உதவி நடுவர்கள் ஒரு குறிப்பிட்ட மையத்தில் இருந்து ஒரு வினாடி கூட தவறாமல் தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பார்கள்.

ஆப்-சைடு, கோல், பெனால்டி, சிவப்பு அட்டை காண்பித்தல் ஆகியவற்றில் நடுவர்கள் துல்லியமாக செயல்படுகிறார்களா? என்பதை தொழில்நுட்ப உதவியுடன் ஆராயும் உதவி நடுவர்கள், தவறு நடந்தால் அது குறித்து உடனடியாக போட்டி நடுவருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதனை உறுதி செய்து போட்டி நடுவர் தனது இறுதி முடிவை அறிவிப்பார்.