லாபகரமான முதலீட்டிற்கு உகந்ததாக சென்னையில் வில்லா - டி ஆர் ஏ இனாரா
சென்னையின் கோல்டன் குவாட்ரிலேட்ரல் என்று அழைக்கப்படும் வேளச்சேரி தாம்பரம் ஓஎம்ஆர் மற்றும் ஜி எஸ் டி ரோடு என்ற இந்த நான்கு இடங்களுக்கு 15 நிமிட தூரத்தில் இருக்கிறது டிஆர்ஏ இனாரா.;
வெளிநாடு வாழ் இந்தியர்கள், தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். குறிப்பாக கோவிட் பெருந்தொற்றிற்கு பிறகு இது அதிகரித்து வருகிறது. அதுவும் மிகவும் பாதுகாப்பான அதிக இட வசதியுடன் கூடிய லாபகரமான முதலீடாக வில்லாக்களை வாங்க விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மற்ற மெட்ரோக்களை போல் இல்லாமல், சென்னையில் ரியல் எஸ்டேட் துறை முதலீட்டிற்கான ஒரு நிலையான உயர்வை சந்தித்து வருவதும், இங்கே முதலீடு செய்வது பிரச்சனை அற்ற அதிக லாபம் தரக்கூடியதாக இருப்பதும், தமிழ்நாடு அரசின் ரேரா (RERA) அமைப்பை துவங்கியுள்ளதும், நில பத்திரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
ஆடம்பரமான வீடுகளை விரும்பும் மக்களின் தேவை அதிகரித்திருக்கும் நிலையில் டிஆர்ஏ ஹோம்ஸ் நிறுவனம் டிஆர்ஏ இனாரா என்ற பெயரில் சொகுசான மற்றும் ஆடம்பரமான வில்லா தொகுப்பை ஓஎம்ஆர் ரோடு நாவலூரில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கியுள்ளது. இந்த வில்லா கம்யூனிட்டி 6 ஏக்கர் பரப்பளவில் 118 வீடுகளை கொண்டுள்ளது. 3, 4 மற்றும் 5 படுக்கை அறைகள் கொண்ட மிக அதிக இட வசதி உள்ள அழகான வீடுகளை கொண்டுள்ளது. இந்த வீடுகள் 1952 முதல் 3697 சதுர அடி அளவில் கவர்ச்சியான அதிக வசதியான அம்சங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் கோல்டன் குவாட்ரிலேட்ரல் என்று அழைக்கப்படும் வேளச்சேரி தாம்பரம் ஓஎம்ஆர் மற்றும் ஜி எஸ் டி ரோடு என்ற இந்த நான்கு இடங்களுக்கு 15 நிமிட தூரத்தில் இருக்கிறது டிஆர்ஏ இனாரா. ஐடி மையங்கள், முக்கியமான கல்வியகங்கள், அதிநவீன மருத்துவமனைகள் மற்றும் கவர்ச்சிகரமான பொழுதுபோக்கு நிலையங்கள் போன்றவைகள் டிஆர்ஏ இனராவின் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிஆர்ஏ ஹோம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோடு அவர்கள் பேசுகையில், "ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி ரோடு, ஒரகடம் போன்ற இடங்களில் இருக்கும் வில்லாக்கள் அதிக வாடகையை, அதாவது வருடத்திற்கு நான்கு முதல் ஆறு சதவிகித வருமானத்தை என்ஆர்ஐ களுக்கு ஈட்டி கொடுக்கிறது. இது மட்டும் இன்றி நகரம் விரிவாக்கப்படுவதும், புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவதும் சென்னையை சுற்றி வெளிப்புற வட்டச் சாலை அமைக்கப்படுவது போன்றவை சென்னை ரியல் எஸ்டேட் துறையை வலுவாக்குகிறது. மேலும் ஐடி காரிடார், ஒன்றிணைந்து இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் மாவட்டங்கள் இவற்றிற்கு அருகாமையில் இருப்பதும் இந்த வில்லாக்கள் கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அழகான வீடு என்று மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் மதிப்பு உயரும் முதலீடாகவும் தற்பொழுதில் முதலீட்டிற்கு கணிசமான வருமானம் அளிக்கும் ஒன்றாகவும் டிஆர்ஏ வில்லாக்களை வாங்க விரும்புகின்றனர்," என்று கூறினார்.
இது மட்டும் இன்றி இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் யூரோ ஏ இ டி போன்றவைகள் மதிப்பு அதிகமாக இருப்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு முதலீடு செய்ய ஏதுவாக இருக்கிறது. இதனாலேயே சென்னைகருகாமையில் உள்ள ஆடம்பரமான வில்லாக்களில் முதலீடு செய்ய இவர்கள் விரும்புகின்றனர்.
சூரிய சக்தி பயன்பாடு, மழை நீர் சேகரிப்பு, வீடுகளில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் போன்றவை இங்கு இருப்பதும் ஒரு கவர்ச்சிகரமான அம்சமாக விளங்குகிறது.
டிஆர்ஏ இனாரா குடியிருப்பில் அதிநவீன ஜிம், நீச்சல் குளம், நீராவி குளியல் அறை, உள் விளையாட்டு அறைகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் வேலை நிமித்தமான சந்திப்புகளுக்கான அரங்கம், படிக்கும் அறைகள், மினி தியேட்டர், துணிகளை சுத்தம் செய்யும் லேண்ட்ரோமேட், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அம்சங்கள் பலவற்றை இந்த வில்லாக்களின் உள் அரங்கங்களில் காண முடிகிறது. மேலும் நடைப்பயிற்சி, ஓட்ட பயிற்சி, யோகா போன்றவைகளுக்கு தேவையான வெளிப்புற பாதைகளும், குழந்தைகள் விளையாட்டு இடமும், பார்ட்டிகள் நடத்துவதற்கான வசதியும், 24 மணி நேர சிறந்த பாதுகாப்பு அம்சங்களும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருந்தாலும் இங்கு ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி லாபகரமானதாக இருக்கிறது. எனவே நீண்ட கால முதலீட்டிற்கு இது சரியான தருணமாக கருதப்படுகிறது. அடுக்கு மாடி குடியிருப்புகளை விட வீட்டு மனை வாங்கி வீடு கட்டுவது முதலீட்டையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது. எனவே பாதுகாப்பான அதிக வருவாய் மற்றும் வளர்ச்சி கொடுக்கக்கூடிய சென்னையின் அருகாமையில் உள்ள டிஆர்ஏ வில்லா வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீட்டுக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.