உத்தியோகஸ்தர்களுக்கு வந்துசேரும் இடமாற்றத்தை தவிர்க்க இயலாது. புதிய முயற்சியில் இறங்குவதை தள்ளிப்போடுங்கள். குடும்பத்தில் அமைதிக் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருக்க வேண்டிய நேரம் இது. முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது, மனைவி யுடன் கலந்து பேசுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, மகாவிஷ்ணுவுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள்.