நன்மையும், தொல்லையும் கலந்தே நடை பெறும் வாரம் இது. தொழில் மாறுதல் சாதகமாக இருந்தாலும் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்களின் சாமர்த்தியத்தால் சிறு சிறு சச்சரவுகள் தவிர்க்கப்படும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் சில விஷயங்களை சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. வாக்குறுதி கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். இந்த வாரம் திங்கட்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.