நிர்வாகத் திறமை மிகுந்த கடக ராசி அன்பர்களே!
செவ்வாய் காலை 9.17 மணி முதல் வியாழன் பகல் 12.25 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், வார்த்தைகளில் கவனமாக இருங்கள். இதுவரை இருந்து வந்த தடை, தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களைப் பெறுவர். உயர் அதிகாரிகளின் மூலம் ஒரு சிலருக்கு மறைமுக வருமானம் வந்துசேரலாம்.
தொழில் செய்பவர்கள், இதுவரை சந்தித்து வந்த தடைகள் விலகும். அதே நேரம் புதிய தொழில் தொடங்குவதற்கு இது சரியான தருணம் இல்லை. கூட்டுத் தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.
கலைஞர்கள் நேரடி முயற்சிகளின் மூலம் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவர். அரசியல்வாதிகள் சிலருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பெண்களுக்கு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வழிபட்டால் தொல்லைகள் அகலும்.