உடல் உழைப்புக்கு அஞ்சாத கடக ராசி அன்பர்களே!
திங்கள் மாலை 5.34 மணி முதல் புதன் இரவு 8.34 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், மனதில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் அமைதியாக செயல்படுங்கள். அப்போதுதான் காரியங்களில் வெற்றியடைய முடியும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். பலருக்கு மனதில் ஏதாவது ஒரு வகையில் அமைதி குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக நடக்க வேண்டிய நிலை உருவாகும்.
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஒரு சிலருக்கு பழைய பாக்கிகள் வசூலாவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் துறையினர் எச்சரிக்கையாக செயல்படுங்கள். கூட்டுத் தொழில் புரிபவர்கள் கூட்டாளிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பரிகாரம்:- தினமும் அதிகாலையில் சூரியனை தரிசனம் செய்து, ஆதித்ய ஹ்ருதயம் சுலோகத்தை படிப்பதால் நன்மை கூடும்.