கடந்த கால பிரச்சினைகள் தீரும். தொழிலை விரிவுபடுத்துவது, வேறு தொழில் செய்வது பற்றி இப்போது சிந்திக்க வேண்டாம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், நிதானத்தை கடைப்பிடியுங்கள். அரசியலில் உள்ளவர்கள் எதிரிகளை ஜெயித்துக் காட்டுவீர்கள். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள், அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள்.