அதிகச் செலவுகள் இருந்தாலும், அவற்றை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவால் சில சலுகைகளைப் பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களின் வரவால் வேலைப் பளு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பெண்கள், தங்கள் பணிகளில் கவனமாக இருங்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.