குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு தேடி வரக்கூடும். உத்தியோகம் செய்பவர்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. மனைவியின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள்.