வழக்கு மற்றும் கடன் பிரச்சினைகள் சாதகமாக மாறும். தொழில் புரிபவர்களுக்கு அரசாங்க கடன் உதவி கிடைக்க வழிபிறக்கும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும், அவை சுபச் செலவாகவே அமையும். பெண்களுக்கு மனச் சலனங்கள் விலகி அமைதி உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்ச நேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.