நீதி நெறிகளில் நம்பிக்கை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
நீங்கள் உற்சாகத்தோடு ஆரம்பிக்கும் செயல்கள் ஒன்றிரண்டில், தாமதம் ஏற்படும். புதிய நண்பர் களைச் சந்திப்பதால் மாற்றங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய திருப்பம் உண்டாகும். பொறுப்புகள் கைமாறிப் போகும். சுயதொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற முயற்சிகள் அதிகம் தேவைப்படும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காமல் போகக்கூடும். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகளைச் சந்திக்க நேருமாயினும், நன்றாகவே நடைபெறும். பெண்களுக்கு சேமிப்பு பெருகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரியம் தள்ளிப் போகலாம். கலைஞர்கள் புதிய வாய்ப்பு களைப் பெற பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். பிரச்சினைக்குரிய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பங்குச்சந்தையில் சுமாரான லாபம் கிடைக்கும். அன்றாட நிலவரங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமை அம்மன் சன்னிதியில் தீபமிட்டு வழிபடுவது பிரச்சினையை தீர்க்கும்.