நேர்மையுடன் பழகும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
ஞாயிறு முதல் செவ்வாய் காலை 9.16 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணத்தில் கவனம் தேவை. முன்னெடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு பெற்று மகிழ்வார்கள். வருமானமும் மகிழ்ச்சி தரும் வகையில் அமையும்.
தொழில் செய்பவர்கள், அரசு வழியிலான சில நன்மைகளைப் பெற்று, அதன்மூலம் தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் லாபகரமாகவே நடைபெறும்.
கலைஞர்களுக்கு சில புதிய வாய்ப்புகள் கிடைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி ஏற்படுத்திக் கொடுக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மட்டுமின்றி அக்கம்பக்கத்திலும் நற்பெயர் ஏற்படும். குடும்பத்தினரோடு பயணம் மேற்கொள்ளும் சூழல் உருவாகலாம்.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபாடு செய்து வந்தால், சங்கடங்கள் விலகும்.