நேர்மையான செயல்களை எப்போதும் செய்யும் மீன ராசி அன்பர்களே!
ஞாயிறு முதல் செவ்வாய் காலை 8.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணத்தில் கவனம் தேவை. முயற்சியுடன் செயல்பட்டு பல காரியங்களில் முன்னேற்றமான பலனை அடைவீர்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தனவரவுகள் சிரமமின்றி வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புகளும், சிலருக்கு அதிகாரிகளின் சலுகைகளும் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலைப் பளுவால் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத் தொழிலில், எதிர்பார்த்த லாபம் வந்துசேரும். மூலப் பொருட்களை வாங்கி, வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். குடும்பம் சீராக நடைபெறும். பெண்களிடையே மனவருத்தம் ஏற்படக்கூடும். கலைஞர்களில் சிலருக்கு பிரபல நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தை லாபம் தருவதாக அமையும்.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் ஆலயம் சென்று சண்முக கவசம் படித்து வந்தால் செல்வம் பெருகும்.