மீனம் - வார பலன்கள்

Update: 2023-02-23 20:00 GMT

பயணத்தில் ஆர்வம் மிகுந்த மீன ராசி அன்பர்களே!

காரியங்கள் அனைத்திலும் தீவிர உழைப்பைக் கொடுத்தாலும், ஒரு சில செயல்கள் மட்டுமே வெற்றியில் முடியும். திட்டமிட்ட பண வரவு வந்து சேரலாம். வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். சகப் பணியாளர்களிடம் இன்முகத்துடன் நடந்துகொள்வது, சங்கடங்களை தவிர்க்க உதவும். சொந்தத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் கூடுதலாக கிடைக்கலாம். பணப்பொறுப்பில் உள்ளவர்கள், பணிகளில் கவனம் இன்றி இருந்தால் பிரச்சினைகள் தோன்றும். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் இருப்பினும், பெரிய பாதிப்புகள் வராது. கலைஞர்கள், பணியில் கவனம் இன்றி இருந்தால் விபத்துகளை சந்திக்க நேரிடும். பங்குச்சந்தையில் நண்பர்கள் உதவியால் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்:- திங்கட்கிழமை அன்று பராசக்தி தேவியை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்