கனிவாகப் பேசி காரியம் சாதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!
மிகுந்த நன்மை தரக்கூடிய வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் எளிதில் பெறுவார்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள், உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைத்து மகிழ்வர்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஒரு சிலர், பரிசும், பாராட்டும் பெறுவர். குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே இனிமை கூடும்.
பெண்கள் எல்லா வகையிலும் மனநிறைவு அடைவார்கள். பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. கனவில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் தென்படக்கூடும். அதனால் கெடுபலன்கள் ஏதும் நிகழாது. மாணவர்கள், படிப்பில் ஆர்வம் காட்டுவர். தெய்வீக தலங்களுக்குச் சென்று வருவது மனநிம்மதியைத் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் சுபகாரியங்கள் கைகூடும்.